இந்தியாவா? – பாரதமா? : இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தியாவா? – பாரதமா? 1 நாடுகள், நகரங்கள், அமைப்புகள் பெயர்கள் மாற்றப்படுவது இயற்கைதான். அந்த வகையில் இந்தியா என்பதைப் பாரத்>பாரதம் என மாற்றுவதையும் இயற்கையாகக் கருதலாம். ஒரு செயல் நன்றாக இருந்தாலும் அதைச் செய்வது யார், அதன் நோக்கம் என்பதைப் பொருத்தே, அது குறித்து முடிவு எடுக்க முடியும். அப்படித்தான் பாசகவின் இந்தியப் பெயர் மாற்றம் குறித்தும் கருதப்படுகிறது. வடக்கே இந்தியா என்னும் சொல்லாட்சி ஏற்பட்டாலும் பன்னெடுங்காலமாக இந்நிலப்பகுதி பரதம் என்றே அழைக்கப்பட்டுள்ளதை நோக்குவோம். தமிழ் மக்கள் நிலத்தை இயற்கையோடியைந்து குறிஞ்சி, முல்லை, மருதம்,…