இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது! – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தித்திணிப்பு அல்ல, இந்தியே கூடாது! மத்திய அரசின் துணையுடன் இந்தி, ஆழமாக வேரூன்றித் தன் நச்சுக்கிளைகளைப் பரப்பி வருகிறது. நம்மை எதிர்ப்பவரை நாம் எதிர்க்கவோ, நம் இனத்தை அழிக்க முயல்பவனை நாமும் வேரறுப்பதிலோ தவறில்லை. உலகெங்கும் நடைபெறும் உரிமைப்போரின் அடிப்படையே இதுதான். ஆனால், அவ்வாறு இந்தியை எதிர்க்க நம்மவர்களுக்கு அச்சம். அதனால், இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித்திணிப்பைத்தான் எதிர்க்கிறோம் என்கின்றனர். இது தவறான கூற்று. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்கள் மாநிலத்தில் இந்தியை வளர்க்க எல்லா உரிமையும் உண்டு. அதனைப் பரப்ப எண்ணினாலும்…