தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடு!
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களுக்கு வேலை வழங்கிடவும் 10% மேல் உள்ள வெளியாரை வெளியேற்றிடவும் வலியுறுத்தி தோழர் பெ. மணியரசன், தலைமை அதிகாரிகளுக்கு மடல். தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசுத் தொழிற்சாலைகள், இந்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கு 90% வேலை வழங்க வேண்டும் என்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10% வேலை மட்டும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரும் ஆவணி 27, 2047 / 12.09.2016 திங்கள் கிழமை காலை 10.00 மணிக்குத் திருச்சி தொடர்வண்டி கோட்டத் தலைமையகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளது. 10% மேல் இந்நிறுவனங்களில் வேலையில் உள்ள வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக…