மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! – வே.ஆனைமுத்து
மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! தமிழைக் காப்போம் வாருங்கள்! தமிழால் வாழ்வோம் வாருங்கள்! அன்பார்ந்த மாணவத் தோழர்களே! கட்டிளங் காளைகளே! இளம்போத்துகளே! 18 அகவைக்கு மேல் 35 அகவை வரை உள்ள ஆடவரும் மகளிருமே மக்கள் தொகையில் அதிகம் பேர், எப்போதும் இந்த விழுக்காடு அதிகம் மாறுவது இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தொகை 7.5 கோடி. இவர்களில் தமிழ் பேசுபவர்களே அதிகம் பேர். தெலுங்கையும், மலையாளத்தையும். உருதுவையும், இந்தி, மார்வாரியையும் பேசுவோர் எல்லோரும் 7, 8 விழுக்காட்டினர் இருக்கக்கூடும். தமிழ்மொழியில் கடலளவு பழந்தமிழ் இலக்கியங்கள் உண்டு. அவை பெரிதும் பாடல்கள்….