எரியும் நெருப்பில்… – மு. தங்கராசு
‘இந்தி, இந்திய மக்களில் பெரும்பாலோர் பேசும் இலக்கிய மொழிகளுள் ஒன்றன்று. இந்திய மொழிகளுள் சிறுபான்மையோர் பேசும் சிறு இலக்கிய, இலக்கண வளமற்ற மொழியேயாகும். எனவே இந்தி மொழி பேசுவோர் அம்மொழியைப் பேசாப் பகுதிகளில் வாழ்கின்ற (குறிப்பாகத் தென்னகத்து) மக்களின் இசைவையும் நல்லெண்ணத்தையும் நாட்டின் ஒருமை உணர்வு கருதிப் பெறல்வேண்டும். இவ்வாட்சி மொழியேற்பாடு இன்றோடு முடிவுறும் நிலையற்ற செயலன்று இக்காலத்தினரால் வரும் காலத்தினருக்காகச் செய்யப்படும் நிலைபெற்ற செயலாகும். எனவே, இதனை இந்தி ஆர்வலர் எவரும் மறக்கலாகாது’ என்று இந்திய அரசலமைப்பு’ (Indian Constitution) என்ற நூலில்…