தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] 3. தமிழ்நலப் போராளி – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙொ] 3. தமிழ்நலப் போராளி புலவர் பட்டம் பெற்ற பின்னர்த் திருவாரூர், குடவாசல், நன்னிலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு (நகராண்மைக் கழக) உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகவும் அடுத்துத் திருவையாற்றில் தாம் படித்த அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். படிக்கும் பொழுதே பரப்புரைப் பணியில் ஈடுபட்ட பேராசிரியர் இவ்விடங்களிலும் அப்பணியைத் தொடர்ந்தார். கல்லூரிகளில் உள்ளவர்களே தொல்காப்பியரை அறியாக்காலத்தில் தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொல்காப்பியருக்கு விழா எடுத்துச் …
பாராளுமன்றில் அறிஞர் அண்ணா – இந்து ஆங்கில நாளிதழ்
பாராளுமன்றில் அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரும்பெருந் தலைவரான அறிஞர் அண்ணா அவர்கள் தமது பாராளுமன்ற முதற் சொற்பொழிவை வெறுப்பிற்கும், பகைமைக்கும், சினத்திற்கும் நடுவண் நிகழ்த்தினார்கள். அன்னார் முதற்பேச்சு இந்திய மேலவையின் வரலாற்றிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். தமிழ்ப் பெருங்குடி மக்களால் ‘அண்ணா’ என்று அழைக்கப்படுகின்ற அரிய தலைவர் இவர். பிரிவினையாளர், இந்தித் திணிப்பின் இணையற்ற எதிர்ப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர் என்னும் புகழோடு இந்திய மேலவைக்கு வந்தார். அறிஞர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய முதற் பேச்சு ‘சொற்பெருமழை’ என்று பாராளுமன்ற…