இனமானப் புலி எங்கே? இன்றிருந்த பகல்தனிலே ஞாயிறில்லை! இரவினிலும் நிலவில்லை! விண்மீன் இல்லை! இன்றெரிந்த விளக்கினிலே வெளிச்சம் இல்லை! எண்டிசையும் செடிகொடியில் பூக்கள் இல்லை! இன்றிதழ்கள் ஒன்றிலுமே முறுவல் இல்லை! இன்றெமது நாட்டினிலே பெரியார் இல்லை! எவர்தருவார் ஆறுதல்? இங் கெவரும் இல்லை! கோல்தரித்து நேற்றுலகைத் தமிழன் ஆண்டான்! கொற்றவனை அவனை இழி வாக்கி மார்பில் நூல்தரித்து மேய்ப்போராய் நுழைந்த கூட்டம் நூறு கதை உருவாக்கி “பிரம்ம தேவன் கால்தரித்த கருவினிலே தமிழன் வந்தான் காணீர் என்றுரைத்தமொழி கேட்டுக் கண்ணீர் வேல்தரித்து நெஞ்சில்…