இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் – மயிலாடன்
இனமானமும், மொழிமானமும் இலக்குவனாரின் குருதியோட்டம் தந்தை பெரியார் மறைவிற்கு 21 நாள்களுக்கு முன்பாகவே கண் மூடினார் நமது பேராசிரியர் சி.இலக்குவனார் (மறைவு 3.9.1973) அவரைப்பற்றி எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம். திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர் களுக்குத் துணையாக இருந்து, தந்தை பெரியார் சுற்றுப் பயணம் முழுவதும் அவருடன் அகலாது தொடர்ந்து பயணித்து, தந்தை பெரியார் உரையாற்றுவதற்கு முன்னதாகப் பேராசிரியர் இலக்குவனாரின் உரை அமைந்துவிடும். இது எத்தகைய பெரும் பேறு அந்தப் பெருமகனாருக்கு. தமிழ்ப் புலமை, ஆங்கிலப்…