என் இனிய தமிழ்மொழி – சக்தி சக்திதாசன், இங்கிலாந்து
என்னைத் தாலாட்டிய மொழி எனதருமைத் தாய் மொழி என் இனிய தமிழ் மொழி எண்ணமெல்லாம் நிறைந்த மொழி என்னை நான் தொலைத்த போது என்னுள்ளே புதைந்த போது எண்ணெய் ஆக மிதந்து என் எண்ணங்களை ஒளிரச் செய்த மொழி இதயத்தின் நாளங்கள் முகாரி மீட்டினாலும் இனிமையான கல்யாணப் பண் பாடினாலும் இதயத்தின் வலி மறக்க உதவும் மருந்தாய் இனிய என் தாய் மொழி என்றும் என்னுடனே முகமிழந்து போனாலும் இக்கொடிய உலகில் முதுமையில் வீழ்ந்து அமிழ்ந்து போனாலும் முகவரி இழக்காது இலக்கிய உலகில் முத்தாக…
தமிழரே தம்மொழிக்குப் பெயரிட்டனர்!
திரவிடம் என்று வடமொழியாளர்கள் நம் செந்தமிழ் மொழிக்கு இட்ட பேரே நாளடைவில் ‘தமிழ்’ என உருத்திரிந்ததெனக் கூறி மகிழ்வர் ஒரு சிலர். அஃது உண்மையற்ற வெற்றுரையென எவரும் எளிதில் அறிவர். செம்மொழியாம் ஒரு மொழி பேசும் நன்மக்கள் தங்கள் மொழிக்குத் தாம் வேறுபேரும் இடாது தங்கள் நாட்டிற் பின்வந்து குடியேறிக் கலந்தவரும், கலந்த அக்காலத்தும் தங்களால் நன்கு மதிக்கப்படாது அயலாராகக் கருதப்பட்ட வரும் ஆகிய வடமொழியாளர்கள் தம் மொழிக்கு இட்ட பேர் கொண்டே தம்மொழியைச் சுட்டினார்கள் எனின் அஃது எங்ஙனம்…
திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனை – களப்பால் குமரன்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – 355 காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் (113) முதல் குறட்பா, அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரிய அறிவியல் உண்மையாகும். 1. பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர். இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . – பாவாணர் The dew on her white teeth, whose voice is soft and low, Is as…