(அதிகாரம் 009. விருந்து ஓம்பல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்   அதிகாரம் 010. இனியவை கூறல்         கேட்பவர் மனமும் மகிழும்படி,        இனியநல் சொற்களைக் கூறுதல்.   இன்சொலால், ஈரம் அளைஇப், படி(று)இலஆம்,      செம்பொருள் கண்டார்,வாய்ச் சொல்.            இரக்க[ம்உ]ள்ள, பொய்இல்லா இன்சொல், அறத்தை ஆராய்ந்தார் வாய்ச்சொல்.   அகன்அமர்ந்(து), ஈதலின் நன்றே, முகன்அமர்ந்(து),      இன்சொலன் ஆகப் பெறின்.        மனம்மகிழ்ந்து ஈதலைவிட, முகம்மலர்ந்து        இன்சொல்…