15 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு    “உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்” – “உத்தமம்” எனும் பெயரில் இயங்கி வருகிறது. 1997 ஆமாவது ஆண்டில் திரு. கோவிந்தசாமி அவர்களின் முழு முயற்சியில் வித்திடப்பட்டு 2000 ஆமாவது ஆண்டில் திரு. சுசாதா, திரு. தமிழ்க்குடிமகன், பேராசிரியர் அனந்தகிருட்டிணன் ஆகியோரின் அன்பு வழியில்இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பா முதலான பல நாடுகளில் “உத்தமம்” அமைப்பின் உறுப்பினர்கள்…