இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை

இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை      குளிர் காலத்தை முன்னிட்டு இனிய வாழ்வு இல்லச் சிறார்களுக்குக் கம்பளி ஆடைகள் தந்துதவுமாறு  அதன் பொறுப்பாளர்கள் வேண்டினர்.  வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உரூ.38300 பெறுமதியான 50 கம்பளி ஆடைகள் கார்த்திகை 18, 2047 /  3.12.2016 சனிக்கிழமை இனிய வாழ்வு இல்லச் சிறார்களிடம் கையளிக்கப்பட்டன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] athangav@sympatico.ca

வட்டு இந்து இளைஞர் சங்கத்தின் தீபாவளிக்கான சிறப்பளிப்புகள்

  வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் தீபாவளி நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்குப் புத்தாடைகளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன..   எமது புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த பரஞ்சோதிஉலோகஞானம், தன் தந்தை பரஞ்சோதி (17.10.2016),  தங்கை இராசேசுவரி (16.10.2016) பிறந்த  நாள்களை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விழிப்புலனற்ற, சிறப்புத் தேவைக்குரிய இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்குச் சிறப்பு நண்பகல் உணவினை வழங்கி வைத்துள்ளதுடன். தீபாவளி  நாளினை முன்னிட்டு இல்ல மாணவர்களுக்கு  ஏறத்தாழ 1,13,000  உரூபா பெறுமதியான புத்தாடைகளையும் வட்டு…

வட்டுக்கோட்டை இளைஞர்கள் இல்ல மாணாக்கர்களுக்கு உதவி

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு 50 உடைப்பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இனிய வாழ்வு இல்லத்தின் நிருவாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இல்ல மாற்றுத்திறனாளி மாணவர்களான விழிப்புலனற்றோர், செவிப்புலனற்றோர் வாய்பேச முடியாதவர்கள் என 50 இல்லச் சிறார்களுக்கு உரூபா 65000 பெறுமதியான 50 உடைப்பெட்டிகள் அன்பளிப்பாக வழங்கபட்டன. அத்துடன் இல்லச் சிறார்களுக்கு சிறப்பு நண்பகல் உணவும் வழங்கபட்டது. [படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப்பார்க்கவும்!]