வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 35 (2.05) – இன்பந் துய்த்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 34 (2.04) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 35. இன்பந் துய்த்தல் 341. துணையோ டின்பந் துய்த்தலே சுவர்க்கம். வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து இன்பம் அனுபவிப்பதே உண்மையான நிரந்தரமான இன்பமாகும். துய்க்கு முறையெலாந் தொல்லகப் பொருள்சொலும். இன்பம் அனுபவிக்கும் முறைகளை பழமையான அகப் பொருள் நூல்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். முறையறி யாதுறல் குறையறி வுயிர்செயல். இன்பம் அனுபவிக்கும் முறைகளை அறியாது செயல்படுவது அறிவற்ற செயலாகும். தன்றுணைக் கின்பந் தரத்தரத் தனக்கதாம். தனது துணைக்கு இன்பம் கொடுக்கக் கொடுக்கத்தான் தனக்கு…