இன அழிப்பில் நீதி கோரிப் போராடுவோம்! – இலண்டன்
ஒன்றுபடுவோம்! செயல்படுவோம்! நீதி கோரிப் போராடுவோம்! வைகாசி 04, 2048 / 18-05-2017, வியாழக்கிழமை மாலை 5மணி நிலக்கீழ் தொடருந்து நிலையம்:, இலண்டன் [Hyde Park, London W2 2UH, Marble Arch] தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பு என்று எமக்குள்ளே நிறையவே கதைத்தாகி விட்டது. போர் முடிந்து 8 வருடங்கள் ஆகியும் மிலேச்சத்தனமான போரின் காயங்கள் ஆறவில்லை. வீர சுதந்திரம் கோரிய எம் தமிழினம் இன்று தம் நிலத்தை விட்டு உலகெங்கும் துரத்தியடிக்கப்பட்டுள்ளது. நம் கடல், நிலம், வீடு,…
சிங்களஇலங்கை சென்றடைந்தன இந்தியப் போர்க் கப்பல்கள்
தமிழ் இனத்தை அழித்த சிங்களஇலங்கையுடனான உறவை முறிக்குமாறு தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வரும் நிலையில் இந்திய – சிங்களஇலங்கைக் கடற்படை உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தன் போர்க்கப்பலை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்தியா – சிங்களஇலங்கை இடையே கடற்படை உறவை மேலும் நெருக்கமாகக் கட்டமைப்பதற்காக இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான வானூர்தி தாங்கிப் போர்க்கப்பல் இந்தியக்கப்பற்படை நாவாய்(ஐ.என்.எசு) விக்கிரமாதித்யா இலங்கைக்கு 21.01.2016 அன்று சென்றடைந்தது. இது குறித்து நடுவணரசு வெளியிட்ட…
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு மனிதநேய ஈருருளிப் பயணம்
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை அவையின் 30ஆவது அமர்வை முன்னிட்டுத் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் திங்கள் கிழமை பிரித்தானியாவில் இருந்து தொடங்கப்பட உள்ளது. பிரித்தானியா, தலைமையர் (தலைமையமைச்சர்) அலுவலகத்துக்கு முன்னால் தொடங்கிப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி (தென்ஃகாக்கு), செல்கிறது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை(புருசெல்) அடைந்து, அங்கிருந்து இலக்சம்புர்க்கு நாட்டை ஊடறுத்து, ஐரோப்பிய பாராளுமன்றத்தை (ஃச்ரார்சுபுக்கு) நோக்கிப் பயணிக்கிறது. தொடர்ந்து…