‘இடைத்தரகர்’ அமைப்புகள் விலகிக் கொள்ள வேண்டும்! – தேடு குடும்பம்
‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும்! இல்லையேல் அம்பலப்படுத்தப்படும்! தேடு குடும்பம் – கை.க.கா.ஆ.உ.தே.க.கு. – சங்கத் தலைவி எச்சரிக்கை! இலங்கை அரசின் மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல், தடுத்து வைத்தல்’ நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குக் ‘கழுவாய் (பரிகார) நீதியும் – முறையான இழப்பீடுகளும்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, உண்மையாகவும் ஒப்படைப்பாகவும்(அர்ப்பணிப்பாகவும்) பணி செய்யும் செயல்பாட்டாளர்கள் யார்; காணாமல் ஆக்கப்பட்டோர் சிக்கலை வெளிநாட்டுத் தூதரகங்களிடமிருந்து நிதி பெறுவதற்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தி வரும் அமைப்புகள் எவை என்பதைக் கடந்த ஏழு ஆண்டுக் காலத்தில்…