தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 4/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 3/17 தொடர்ச்சி) தனித்தமிழ்க் கிளர்ச்சி : 4/17 முத்தமிழ் குயில்மயில்போல் இன்பம் கொடுக்குமொரு மொழியென்றால்இயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டும் அம்மானைஇயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டு மாயிடினேபயில்தமிழ்அம் முச்சிறப்பும் படைத்துளதோ அம்மானைசிலப்பதிகா ரத்தில்முச் சிறப்புமுள தம்மானை (16) இயற்றமிழ் புதுக்கியதேன் சுவைசொட்டும் புகழ்ச்சிமிக்க தமிழதனில்மதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள அம்மானைமதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள வானாலும்ஓதுக்கலுறும் குப்பைகளும் உள்ளனவால் அம்மானைஉள்ளகுப்பை ஆரியத்தின் உதித்தனவாய் அம்மானை (17) இடமார்ந்த தமிழ்நாட்டில் இலங்கு தமிழாம்தடமொழிபல் தமிழ்க்கதைநூல் தாங்கியுள…