தோழர் தியாகு எழுதுகிறார் 46: சொல்லடிப்போம் வாங்க! (6)
(தோழர் தியாகு எழுதுகிறார் 45 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (6) பொன்முருகு கவிமுருகு எழுதுகிறார்: இயம், இசம், இயல் எல்லாமே கொள்கை அல்லது தத்துவம் என்பதற்கான சொல்லாட்சிதானே தோழர்? தாராளியம் என்பது எப்படி அமைப்பையும், தத்துவத்தையும் குறிக்கிறது? என்பதை விளக்கப்படுத்துங்கள். இசம் என்று எழுதுவது ism என்று ஆங்கிலத்தில் சொல்வதன் ஒலிப்பெயர்ப்பு. இயல் என்பது அமைப்பாகவும் இருக்கலாம், கொள்கையாகவும் இருக்கலாம். அரசியல் (politics), பொருளியல் (economics), புவியியல் (geography) என்னும் சொற்கள் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து வாழ்க்கைத் துறைகளையோ அறிவுத் துறைகளையோ குறிக்கும். இசம் என்பதற்கு மாற்றாகச் சிலர் இயலைப் பயன்படுத்துகின்றனர். காட்டாகப், பெரியாரியல் என்பது…