புதுக்கோட்டை திருக்குறள் கழகத்தின் தலைவர் பா.இராமையா அவர்கள் 5.2.14 புதன்கிழமை இரவு காலமானார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த நெய்வேலி என்னும் சிற்றூரில் 15.03.1935 இல் பிறந்தவர். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்ற இவர் புதுக்கோட்டை இந்தியன் வங்கி மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர், கல்லூரியில் பயிலும்பொழுதிலிருந்தே நல்ல தமிழுணர்வும் பகுத்தறிவும் கொண்டவராக விளங்கினார்.  திருக்குறளின் பால் தீராக்காதல் கொண்டிருந்த இவர் தனது பணிநிறைவிற்குப் பின்னர் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனரால் தொடங்கப்பட்டு இயங்கி வந்த திருக்குறள் கழத்தின் தலைவராக…