திருவாரூர் இலக்கிய வளர்ச்சிக் கழகம், கருத்தரங்கம் 58
தை 6, 2046 / சனவரி 20, 2015
இரண்டாம் ஆண்டில் ‘அகரமுதல’
‘அகரமுதல’ மின்னிதழ் இரண்டாம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் அடிஎடுத்து வைக்கின்றது. இதன் வளர்ச்சியில் நாட்டம் கொண்ட படிப்பாளர்கள் படைப்பாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நன்றியைத் தெரிவிக்கிறோம். ‘அகரமுதல’ மின்னிதழ் அடைய வேண்டிய இலக்கு இன்னும் தொலைவில் உள்ளது. இருப்பினும் தளராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கின்றது. நற்றமிழில் நடுவுநிலையுடனும் துணிவுடனும் செய்திகளையும் படைப்புகளையும் தரும் மின்னிதழ் எனப் படிப்போர் பாராட்டுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. தமிழ் மொழி, தமிழினம், ஈழத்தமிழர் நலன், கலை, அறிவியல், தொல்லியல் முதலான பல்துறைச் செய்திகள், கதை, கவிதை, கட்டுரை, நாடகம்…