எதிர்காலத்திற்கான பாதை அமைப்பு அன்பளிப்பு
கிளிநொச்சி சிறப்புத் தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு இலண்டனைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பான எதிர்காலத்திற்கான பாதை(PATH TO THE FUTURE) வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாகப் பல கட்டங்களாக 326,815 உரூபாய் பெறுமதியான பொருட்கள்- நிதி முதலியன அன்பளிப்பு. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரம் பகுதியில் சிறப்புத் தேவைக்குரிய மாற்றுவலுவுடைய மற்றும் முற்றிலும் இயங்க முடியாத பிள்ளைகள் எனத் தொடக்கக்கட்டமாக 14 பிள்ளைகளுடன் இவ்வமைப்பு இயங்கி வருகின்றது. இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி இல்லப் பிள்ளைகளைப் பேணுவதில் பல இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும்…