அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! – இரவிக்குமார்
அ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி! தமிழறிஞர் அ.அ.மணவாளன் (ஆவணி 21, 1936 / 06.09.1935 – கார்த்திகை 14, 2049 / 30.11.2018) தமிழறிஞரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவரும் (1989-1996) சரசுவதி சம்மான் விருது பெற்றவருமான பேராசிரியர் அ.அ.மணவாளன் நேற்று (கார்த்திகை 14, 2049 / நவம்பர் 30) மறைந்தார். அண்மைக் காலமாக உடல் நலிவுற்று மருத்துவம் பெற்று வந்த அவர் பண்டுவம் பலனளிக்காமல் 30.11.2018 அன்று இரவு 8 மணிக்குக் காலமானார். அவருக்குத் திருமதி சரசுவதி என்ற மனைவியும்,…
வைரமுத்துவும் ஆண்டாளும் – இரவிக்குமார், இ.எ.தமிழ்
சொன்னால் முடியும் : ஆண்டாள் சர்ச்சை – மதவெறிக்கு மாற்று சாதிப் பெருமிதம் அல்ல வைரமுத்துவை ஆதரிப்பதா கண்டிப்பதா எனப் பார்க்காமல் இதனூடாக நிலைபெற முயலும் வகுப்புவாதத்தை எதிர்ப்பது எப்படி என்றே பார்க்க வேண்டும். மார்கழி முடிந்து தை பிறந்துவிட்டது. இன்னும் ஆண்டாள் சச்சரவு முடிவுக்கு வரவில்லை. கவிஞர் வைரமுத்து வருத்தம், விளக்கம் என வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனாலும் அவர் மீதான தாக்குதல்கள் நிற்கவில்லை. தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு கலவரத்தை மூட்டிவிடவேண்டும் என்று திட்டமிட்டு சிலர் இதை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. ஆண்டாளின்…
கல்வெட்டில் முதல்திருக்குறள்
சென்னை குறள்மலைச்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில்உள்ள மலையப்பாளையத்தில் உள்ள உதயகிரி முத்துவேலாயுதசாமி கோவிலில் கல்வெட்டில் முதல்திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. 2047 ஆனி 19 / 2016 சூலை அன்று கல்வெட்டில் முதல் குறள் திறப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் இ.வி.ஆ.மை.(இசுரோ) இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டு கல்வெட்டில் முதல் திருக்குறளை அறங்கேற்றம் செய்து பேசினார். திருக்குறளை நாள்தோறும் படிக்க வேண்டும். அதைப்புரிந்து கொண்டு, அதன்படி நாம்வாழ்க்கையில் வாழ வேண்டும். இங்கே திருக்குறள் கல்லில் பதியப்பட்டிருப்பது போல்,…
கைவிட முடியாத கனவு! – பா.செயப்பிரகாசம்
தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது. விடுதலையைக் காதலித்த எண்ணிக்கையற்ற போராளிகள் அதற்காக மடிந்தார்கள். எந்தக் கனவினைச் சுமந்து போராளிகள் இறக்கிவைக்காமல் நடந்தனரோ, அந்தக் கனவின் மீதி இன்னும் இருக்கிறது. புதைக்கப்படுவது என்பதினும் விதைக்கப்படுவோராய் போராளிகள் ஆகியிருந்தனர். ஈழப்பகுதியெங்கும் நிறைந் திருந்தன மாவீரர் துயிலுமில்லங்கள். இலங்கை இராணுவத்தால் இன்று சிதைக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் நம்மை நோக்கிக் கேள்வியெழுப்புகின்றன- எங்கே எமது கனவின் மீதி? ஒரு வித்து நல்வித்து எனத் தெரிகிறது. நல்வித்தை…
நாட்டாரியல் பேராசிரியர் கரு.அழ.குணசேகரன் இயற்கை எய்தினார்
(சித்திரை 29, 1986 /12 மே 1955 – தை 06, 2047 / 17 சனவரி 2016) ஓய்ந்தது உரிமைக்குரல் நாட்டரியல் ஆய்வாளரும் நாட்டுப்புறக்கலைஞரும் நாடக ஆசிரியரும் நடிகரும் நாடகத்துறைப் பேராசிரியருமான முனைவர் உடல்நலக் குறைவால் இன்று தன் 60 ஆம் அகவையில் புதுச்சேரியில் கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கே.ஏ.குணசேகரன் என அழைக்கப்பெறும் இவர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர்; இளையான்குடி உயர்நிலைப்பள்ளி, இளையான்குடி முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை அரசு…
தமிழியல் ஆய்வுக்கு ஒரு வழிகாட்டி அறிஞர் ஆ.வேலு(ப்பிள்ளை)- இரவிக்குமார்
ஈழத் தமிழறிஞர் ஆ.வேலுப்பிள்ளை (1936-2015): தமிழியல் ஆய்வுக்கு வழிகாட்டி ஈழத்தைச் சேர்ந்த அறிஞர் ஆ. வேலுப்பிள்ளை மறைந்த செய்தியை அறிந்தபோது கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக அவரது நினைவு எழாமல்போய்விட்டதே என வருத்தமுற்றேன். அவரை நேரில் அறிந்ததில்லை எனினும் அவரது எழுத்துகள் வழியே நெருக்கமாய் உணர்ந்திருக்கிறேன். தொல்லியல், கல்வெட்டியல், செவ்வியல் இலக்கியம் எனப் பல்வேறுதுறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவராக இருந்தவர். தமிழும் பௌத்தமும் குறித்துபேராசிரியர்பீட்டர் சால்க்குடன் இணைந்து அவர் தொகுத்த இரண்டு தொகுதிகள் மிகவும் முதன்மைத்துவம் வாய்ந்தவை. தனது 28 ஆவது அகவைக்குள் இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 1960-1961 ஆம் ஆண்டுக்கான இலங்கை குடிமைப்பணித் தேர்வில் இலங்கை முழுதுமிருந்து தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவராக அவர் இருந்தார். அந்தப் பதவிக்குச் சென்றிருந்தால் அரசாங்கத்தில் அதிகாரம் மிக்கப் பொறுப்புகளுக்குப் போயிருக்கலாம். ஆனால் ஆசிரியர் பணியிலேயே தொடரவேண்டும் என அவர் முடிவெடுத்தார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையிடம் கல்வெட்டியலைப் பயின்று…
இலட்சுமி என்னும் பயணி – வாசிக்கவேண்டிய ஒரு நூல் : இரவிக்குமார்
பட்டறிவுகளைப் பேசும் அபூர்வமான பதிவு இலட்சுமி அம்மா எழுதிய ‘இலட்சுமி என்னும் பயணி’ என்ற தன்வரலாற்று நூல் ‘மைத்திரி புத்தகங்கள்’ என்ற புதிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனின் மனைவியான இலட்சுமி அம்மாள் தான் பிறந்து வளர்ந்து படித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போனது; மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களோடு பழக்கம் ஏற்பட்டு அவசரநிலைக் காலத்தில் தோழர் பெ.மணியரசனைத் திருமணம் செய்துகொண்டது; அதன் பின்னர் தோழர் மணியரசன் இ.பொ.க. -மார். (சிபிஐ எம்) கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்து…
மகளிர் நலம் காக்கும் மணிமேகலை அம்பலவாணனுக்கு ‘நிகரி’ விருது
நல்லாசிரியர் துளசிதாசனுக்கும் நிகரி விருது. மணற்கேணி வழங்கும் நிகரி விருது 2015 ஒவ்வோர் ஆண்டும் ‘மணற்கேணி’ ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சமத்துவத்தை ஊக்குவிக்கும் கல்லூரி ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் ‘நிகரி’ என்னும் விருதளித்துச் சிறப்பித்து வருகிறோம். 2015 ஆம் ஆண்டுக்கான நிகரி விருதுகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை, சமயபுரம் எசு.ஆர்.வி மேனிலைப்பள்ளியின் முதல்வர் துளசிதாசன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். திருச்சி ஃபெமினா உணவகத்தில், ஆவணி 19, 2016 / செப்டம்பர் 5 சனி மாலை 6 மணிக்கு…
திருக்குறள் கல்வெட்டு – கலந்தாய்வு : படங்கள்
திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கப் படங்கள்
திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம் கோவை இந்துத்தான் கல்லூரியில் புரட்டாசி 5, 2015 / 21.09.2014 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் “கல்வெட்டில் திருக்குறள்” என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் குறள் மலைச்சங்கம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. (பெரிய அளவில் காண ஒளிப்படங்களைச் சொடுக்கிக் காணவும்)
மத்தியில் நல்ல பிரதமரைத் தேர்ந்து எடுக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
திருவள்ளூர் தொகுதியில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை ஆதரித்து, ஆவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த கூட்டத்திற்கு வர இயலாத நிலைமையில், உடல் நலிவுற்று படுக்கையிலே இருந்த என்னை, நம்முடைய தேர்தல் பொறுப்பாளரும், மாவட்ட நிருவாகிகளும் வந்து சந்தித்து இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். உடல் நலிவு எனக்கு மட்டும் அல்ல, தமிழ்நாடே இன்று நலிவுற்று இருக்கிறது. அதை நீக்க அனைவரும் ஒன்று படும் நேரத்தில், நான் வீட்டில்…