புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார் – இரவி இந்திரன்
புரட்சி எண்ணமும் செயலும் கொண்ட இலக்குவனார் அஞ்சா நெஞ்சும் அதிஉயர் கல்விச் செறிவும் வரலாற்றுத் தெளிவும் ஒருங்கே உருவான அறிஞரின் கதை. (17.11.1909 – 03.09.1973) 1965, இந்தி எதிர்ப்புப் போராட்ட காலம். உளவுத்துறைக்கு ஒரு செய்தி வருகிறது. தமிழகமெங்கும் போராட்டத் தீ பரவிக்கொண்டிருக்கிறது. மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைக் எரிக்கப் போகிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. உடனே விழிப்படைந்த உளவுத்துறையினர் அறிஞர் அண்ணாவிடம் வருகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளும்படி அறிக்கை விடும்படி கேட்கிறார்கள். மாணவர்களின்…
வ.உ.சி என்ற பன்முக ஆளுமை! – இரவி இந்திரன்
வ.உ.சி என்று அழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரப்பிள்ளை பிரித்தானிய இந்திய நீராவிக் கப்பற்பயண நிறுவனத்திற்கு (British India Steam Navigation Company) எதிராக 16.10.1906 இல் உள்நாட்டு(சுதேசிய) நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியதால் கப்பலோட்டிய தமிழன் என்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயற்பட்டமைக்காகச் சிறைத்தண்டனை துய்க்கையில் செக்கிழுக்க வைக்கப்பட்டமையால் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கப்படும் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்ல ஒரு சிறந்த வழக்கறிஞர், கவிநயம்மிக்க எழுத்தாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முக ஆளுமைகொண்டவர்….
வெல்வோம் நாமென உறுதியெடு! – இரவி இந்திரன்
வெற்றி நமக்கென முழக்கமிடு! வெல்வோம் நாமென உறுதியெடு! வல்லவனே வாழ்வான் வரலாறு சொல்கிறது. வெல்பவனே வாழ்வான் வெளிப்படை உண்மை. கொல்வோம் என்றொரு போர்க்குணம் கொண்டு எல்லையில் நிற்கிறது சிங்களம் இன்று வெல்வோம் நாமென வேங்கைகள் கூட்டம் பகை வென்றே காக்கிறார் எங்களின் தேசம் தருமம் என்றொரு அடிப்படை உண்டு தமிழனின் பக்கம் எப்போதும் உண்டு வெற்றி என்றொறு மந்திரம் உண்டு எங்கள் தலைவனுக்கது சொந்தம் என்றும் இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தம் செய்! இரத்தம் சிந்தும் யுத்த அரசியல் செய்! அப்போது தான் நீ…