தமிழ்ப் பண்பாட்டுப் பங்களிப்பால் இந்திய நாகரிகம் செழுமையுற்றது. – தாகூர்
தமிழ்ப் பண்பாட்டுப் பங்களிப்பால் இந்திய நாகரிகம் செழுமையுற்றது. ஆரியரல்லாதார் இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கியுள்ள பங்களிப்பைப் பயன்மதிப்பு அற்றதென யாரும் கருத வேண்டா. உண்மையைச் சொல்லுவதெனில், பழந்தமிழ்ப் பண்பாடு எவ்வகையிலும் மதிப்புக் குறைந்ததன்று. திராவிடப் பண்பாட்டோடு ஆரியப் பண்பாடு ஒன்று சேர்ந்ததால் தோன்றியதே இந்திய நாகரிகம். திராவிடப் பண்பாட்டின் தாக்கத்தால், இந்திய நாகரிகம் செழுமையும் சிறப்புமுற்றது; அகலமும் ஆழமும் அடைந்தது. … … … அவர்கள் மெய்யுணர்வுடன் கலையுணர்வு மிக்க கலைஞர்கள்; ஆடலிலும் பாடலிலும் அவர்கள் தன்னிகரற்றவர்கள். கவின்மிகு கலைவடிவங்களைத் திட்டமிட்டு…