தோழர் தியாகு எழுதுகிறார் 67 : ‘மண்டல்’ தீர்ப்பின் சாரம்

 (தோழர் தியாகு எழுதுகிறார் 66 தொடர்ச்சி) ‘மண்டல்’ தீர்ப்பின் சாரம் [பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீடு பற்றிய நீதியர் இரவீந்திர பட்டு(Ravindra Bhat) தீர்ப்பின் ஒரு பத்தியைத் தாழி 37ஆம் மடலிலும் இன்னொரு பத்தியை 38ஆம் மடலிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டிருந்தேன். மண்டல் தீர்ப்பு என்று பெயர் பெற்ற இந்திரா சாகுனி(Indra Sawhney) தீர்ப்பின் முகன்மைக் கூறுகளை இரவீந்திர பட்டு தமது தீர்ப்புரையில் சுருக்கித் தொகுத்துக் கொடுத்துள்ளார். சட்ட அறிவிலும் தமிழாக்கப் பயிற்சியிலும் அக்கறையுள்ள அன்பர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் அந்தத் தொகுப்பை இதோ படைக்கிறேன்:-  இட ஒதுக்கீடுகள்…

தோழர் தியாகு எழுதுகிறார்  62

(தோழர் தியாகு எழுதுகிறார் 61 தொடர்ச்சி) தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கு ஒரு திறந்த மடல் பாராட்டே அவமானம்? இந்து- தமிழ், திசை நாளேட்டில் சென்ற திசம்பர் 12 ஆம் நாள் அண்ணல் அம்பேத்துகர் குறித்து நீங்கள் எழுதியுள்ள “அவமானமே பாராட்டு!” என்ற கட்டுரை படித்தேன். அம்பேத்துகர் தாம் வாழ்ந்த காலத்தில் ஏசப்பட்டார், இழிவுபடுத்தப்பட்டார், அவர் மறைந்து இத்துணைக் காலம் கழித்தும், அவரது 65ஆம் நினைவு நாளிலும் (2022 திசம்பர் 6) அவமதிக்கப்பட்டார். அன்று போலவே இன்றும் இந்தச் சமூகம் மாறாமல் இருப்பதே காரணம் என்று நீங்கள் எடுத்துக் காட்டியிருப்பது சரியானது. அம்பேத்துகருக்குக் காவி உடை அணிவித்து நெற்றியில் நீறு பூசுவதும், அவருக்குச் செருப்பு மாலை போடுவதும்…