சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நினைவு விழா
“சிலம்புச் செல்வர்” தாமரைத்திரு முனைவர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 20-ஆம் ஆண்டு நினைவு விழா மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா! தமிழகத்தின் எல்லைகளை மீட்டுத் தந்தவர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழர் நலனிற்காகப் பாடுபட்டவர், அதற்காகப் பல போராட்டங்கள் நடத்தியவர், அரசியல், மொழி, இலக்கியம் ஆகியவற்றில் 120-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர் “சிலம்புச் செல்வர்” ம.பொ.சி. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மா.பொ.சி. அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் புரட்டாசி 16, 204 / 03-10-2015 அன்று…
இலக்குவனார் கருத்தரங்க நூல் அறிமுகம் – ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்
‘பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்’ நூலறிமுக விழா பரபரப்பு நிறைந்த சென்னை பாரிமுனைப்பகுதியில் உயர்நீதி மன்றத்தின் எதிரே உள்ள 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒய்.எம்.சி.ஏ. கட்டடித்தினுள் அமைந்துள்ள “ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கம் தமிழறிஞர்கள், தமிழ்ப் போராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என நிறைந்து காணப்பட்டது. காரணம், தமிழ்ப் பேரறிஞர், திருக்குறள், தொல்காப்பியங்களின் உரைநடை நூல்கள் படைத்தவர், மொழி பெயர்ப்பாளர், மொழிப் போராட்ட ஈகையாளர், கவிஞர், இதழியலாளர், இத்தனை சிறப்புகளுக்கும் உரியவரும், தமிழ்மொழி வளர்ச்சிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவருமான பெருமகனார் மறைந்த பேராசிரியர் சி. இலக்குவனார்…
மொழி உரிமை மாநாட்டுச் செய்திகள்
பிற படங்களுக்குச் சொடுக்கிக் காண்க: http://thiru2050photos.blogspot.in/2015/09/blog-post_30.html தொன்மை மொழியான தமிழ் முதலான இந்தியாவின் பல்வேறு மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, பத்திரிக்கையாளரும், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கினைப்பாளருமான திரு. ஆழி செந்தில்நாதன் அரும்பெரும் முயற்சியாக, “மொழி உரிமை மாநாடு” சென்னையில் இரண்டு இடங்களில் இரு நாளாக (புரட்டாசி 02 & 03, 2046 / செப். 19 & 20, 2015) நடைபெற்றது, தமிழ் முதலான பல்வேறு மொழி உரிமைக்கான தீர்மானங்களை உருவாக்குவதற்காகப் பல்வேறு தமிழ் அறிஞர்களும், செயல்வீரர்களும் வல்லுநர்களும், இணைந்து…
இனி என்ன செய்யப்போகிறோம் நாம்? – இனப் படுகொலைக்கு எதிரானவர்கள் கேள்வி!
இனி என்ன செய்யப்போகிறோம் நாம்? இனப் படுகொலைக்கு எதிரான செய்தியாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள் குழு கேள்வி! “தமிழரைக் காப்பாற்றத் தவறிய ஆற்றல்கள் இலங்கையைக் காப்பாற்றத் துடிப்பது ஏன்”? என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆவணி 27, 204613-09-2015 அன்று சென்னை, மயிலாப்பூர் நகரமேம்பாட்டுக்கட்டளை நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொண்ட இக் கருத்தரங்கத்தி்ல், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையில் தனி ஈழம் அமையவும், இலங்கையின் மீது இனப்படுகொலை-போர்க்குற்றத்திற்கு எதிரான பன்னாட்டு விசாரணை…