‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’ – புகழேந்தி தங்கராசு

‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’ ‘‘காணாமல் போனதாகச் சொல்லப்படுகிற 20,000 பேரும் உயிருடன் இல்லை… இறந்துவிட்டனர்…’’  – மரண வியாபாரி கோதபாய இராசபச்சவின் இந்தப் பொறுப்பற்ற வாக்குமூலம், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. காணாமலாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இருபதாயிரம் மட்டும்தானா? ஒரு நாட்டின் அதிபர் என்கிற பொறுப்பான பதவியில் இருக்கிற ஒருவர், எந்த அடிப்படையில் இந்த எண்ணிக்கையை உறுதி செய்தார்? அவர்கள் இறந்துவிட்டதாக மெய்ப்பிக்கத் தேவையான ஆதாரங்கள் / தடயங்கள் / சாட்சியங்கள் இலங்கை அரசின் கைவசம் இருக்கின்றனவா? அவை இருந்தால், இத்தனை ஆண்டுகளாக…

இராசபக்சவை வீழ்த்தியது எது? – திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராசு

  இராசபக்சவை வீழ்த்தியது எது?   “எமது விடுதலை தொடர்பாக இலங்கைக் குடியதிபர்(சனாதிபதி) மைத்திரிபாலா கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாததால், காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மீண்டும் தொடங்குகிறோம். இறப்புக்குப் பிறகு, எங்கள் உடல்களை யாழ் பல்கலைக்கழக மருத்துவப் புலத்தில் ஒப்படைக்கும்படி மைத்திரியைக் கேட்டுக்கொள்கிறோம்! எம் மாணவர்களின் மருத்துவ ஆய்வுகளுக்கு எம் உடல்கள் பயன்படட்டும்….”  இப்படியோர் உருக்கமான அறிவிப்புடன் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார்கள், இலங்கையின் ௧௪ (14) சிறைகளில் நீண்ட காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ௨௧௭ (217) தமிழ் அரசியல் கைதிகள்.  அத்தோபர் இறுதியில், தங்களது விடுதலை…