வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை இலக்கியச் சொற்பொழிவு
பேரன்புடையீர், வணக்கம். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம், இம்மாதம் கார்த்திகை 09, 2049 ஞாயிற்றுக்கிழமை 25-11.2018 அன்று கிழக்கு நேரம் இரவு 9:00 மணி முதல் 10:00 மணிவரை பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டத்தில் ‘இராசராச சோழன் – வரலாறும்,பண்பாடும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார் சிறப்புப் பேச்சாளர், பேராசிரியர் பா. இறையரசன் [தமிழ்ப் பேராசிரியர்(ஓய்வு)]. இந்த இலக்கியக்கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.