காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 3/4 – கி.சிவா
(காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 2/4 – தொடர்ச்சி) காக்கைவிடு தூது பனுவல் உணர்த்தும் இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல் 3/4 தமிழின் தொன்மையும் ஆரியத்தின் சீர்குலைப்பும் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலே பிறந்து, கடல்கோளால் அழிந்துபோன குமரிக் கண்டத்தில் செழித்து வளர்ந்த தமிழ்மொழி, ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைப்பட்ட’ (தொல்காப்பியப் பாயிரம்) எல்லையில் வழங்குவதாயிற்று. இப்பகுதியில் வாழும் தமிழ் மக்கள் அடுத்தவர்க்குத் துன்பம் செய்யாத இயல்பினர். எதிரிகளையும் மன்னிக்கும் பண்பினர். ஆதரவற்று ஏதிலிகளாய் வருகின்றவர்களை அன்புடன்…
மன அமைதிக்கு மருந்து நூல்களின் பங்கு 2/2 தி.வே.விசயலட்சுமி
மன அமைதிக்கு மருந்து : நூல்களின் பங்கு 2/2 சிறந்த அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த மாமேதை சாக்ரடீசுக்கு மரணத் தண்டனை அறிவிக்கப்பட்டது. இளைஞர்களைச் சிந்திக்க வைத்த அந்த மேதை நஞ்சு அருந்தி இறக்க வேண்டும் என்பது தண்டனை. சாக்ரடீசு அதற்காகக் கவலைப்படவில்லை. தண்டனை நிறைவேற்றும் நாள் நெருங்கிவந்தது. சிறையில் இருந்த சாக்ரடீசு அந்நாட்டின் ஒரு கவிஞர் எழுதிய கவிதைகளைத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார். அனைவரும் வியந்து அவரிடம் படிப்பதற்கான காரணத்தைக்…
பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 2/3 – வாலாசா வல்லவன்
(பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? 1/3 தொடர்ச்சி) 2/3 ஆந்திராச் சிக்கல் குறித்து திராவிடர் கழக நடுவண் மேலாண்மைக்குழு 11-1-1953இல் நிறைவேற்றிய தீர்மானம்: (அ) ஆந்திர நாடு பிரிவினையில் ஆந்திரர்கள் பிடிவாதமாக இருப்பதால் ஆந்திரநாட்டைப் பிரிப்பதில் காலதாமதம் செய்யாமல் உடனடியாகப் பிரித்து விடவேண்டுமென்று இக்குழு தெரிவித்துக் கொள்ளுகிறது. அப்படிப் பிரிப்பதில் ஆந்திரநாட்டினரிலேயே சிலர் பிரிவினைக்கு முட்டுக்கட்டை போடுகிற மாதிரியில் தாங்கள் பிரிந்துபோன பின்பும் எஞ்சியுள்ள சென்னை நாட்டில் தங்களுக்குச் சில உரிமையோ சலுகையோ அதாவது பொது நீதிமன்றம், பொது ஆளுநர் முதலியவை சென்னையிலிருக்க…
கலைச்சொல் தெளிவோம் 15 – நெறியுரை: சில குறிப்புகள்
கலைச்சொல் ஆர்வலர் மிகுதியாக இருப்பினும் கலைச்சொற்கள் கண்டறியுநரும் புதியன புனையுநரும் ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் உள்ளனர். நான் மாணவப்பருவத்திலிருந்தே கலைச்சொற்களில் ஆர்வம் காட்டி வருகின்றேன். நான் ஆட்சித்துறையில் இருந்தமையால் தமிழ்க்கலைச்சொற்களையும் புதிய கலைச்சொற்களையும் பயன்பாட்டிற்குக் கொணரும் வாய்ப்பு கிடைத்தது. அறிவியல் கலைச்சொற்களைப் பொருத்தவரை கட்டுரையாளர்களும் நூலாசிரியர்களும் பயன்படுத்தினால்தான் நிலைப்புத்தன்மை கிட்டும். வெறும் அ்கராதியாக இல்லாமல் சொல் விளக்கமாக இருந்தால்தான் புரிந்து கொண்டு பயன்படுத்த இயலும் என்பதால்தான் கலைச்சொல் விளக்கங்கள் அளித்து வருகின்றேன்.ஒரு சொல்லுக்கான பொருளையோ விளக்கத்தையோ தருவதுடன் நில்லாமல் அச்சொல் பயன்பாட்டில் உள்ள பிற இடங்களுக்கும்…