எத்தனை நாள் சிறையில் என்னை வைத்திருப்பீர்கள்? பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம்-03
(பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி : பாகம் – 02 தொடர்ச்சி) ஐயா, இன்னமும் எத்தனை நாள் சிறையில் என்னை வைத்திருப்பீர்கள்? பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி – பாகம்-03 [வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!] அப்போதெல்லாம் ஈழப்போராட்டத்துக்குக் குரல் கொடுத்தால், உதவி செய்தால் அவர்கள் மீது வழக்கு, தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும். 3 – 4 மாதங்களில் பிணை அல்லது ஓராண்டுச்…
இன்னமும் அந்த இரவு விடியவே இல்லை! பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! – பாகம் – 02
(பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! – பாகம் 01 தொடர்ச்சி) 02 இன்னமும் அந்த இரவு விடியவே இல்லை! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி!: பாகம் – 02 மறுபிறவியில் சிறிதும் நம்பிக்கையற்ற நான் எல்லா உயிர்களுக்கும் வாழ்வு ஒரு முறைதான் என்ற கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன். பேரறிவாளன் என்கிற மனிதன் பிறந்துவிட்டபின் அவன் ஒருநாள் மடிந்து சாகத்தான் போகிறான். மீண்டும் ஒரு போதும் அவன் எந்த வடிவிலும் எழுந்து வரப்போவதே இல்லை. எல்லா மனிதர்களின் வாழ்வும்…
பிரபாகரனின் செருப்படி ஒரு குறியீடு
பிரபாகரனின் செருப்படி ஒரு குறியீடு நூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்கும் துயரங்களுக்கும் காரணமான ஒருவனைத் துணிவுடன் செருப்பால் அடித்துள்ளார் பிரபாகரன் என்னும் இளைஞர். பிரபாகரன் என்னும் பெயர் செய்த மாயம்போலும் இத்துணிவு அவருக்கு வந்துள்ளது. இதுகேட்ட உலகத்தமிழர்கள் உவகை கொள்கின்றனர். ஆனால், செருப்படி பெற்ற நாராயணன் தண்டிக்கப்பட வேண்டிய ஆள்தான் என்றாலும் செருப்பால் அடித்தது தவறுதான் என்கின்றனர் ஒரு சாரார். செருப்படிகொடுத்தது தவறுதான்! பிராமணர் தெருவில் ஒடுக்கப்பட்டடவர் செல்லக்கூடாது என்ற தீண்டாமைக்கு எதிராகச் செயல்பட்ட, மகப்பேற்றிற்காக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒடுக்கப்பட்ட பெண்ணைப்…
எழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்!
அப்பாவிகள் எழுவரும் அவர்கள் குடும்பத்தினரும் தமிழ்ச்சுற்றத்தினரும் மனிதநேயர்களும் மகிழ வேண்டிய வாய்ப்பு பறிபோய்விட்டது! பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு ஒன்று பொல்லாச் செய்தியாக மாறி விட்டது. ஏனிந்த அவலம்? யாரிதற்குப் பின்னணி? சதியாளர்கள் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை. என்றாலும் இதுபோன்ற இன எதிர்ப்புக் குரல்களும் அதனை இனப்பற்றுள்ளவர் என்ற நம்பிக்கைக்கு ஆளானவர்களே எதிரொலிப்பதும் தமிழினத்திற்கே உரியன போலும்! ஆட்சியில் இருந்தால் ‘இந்தியனா’கவும் இல்லாவிட்டால் ‘தமிழனா’கவும் நடந்து கொள்ளும் முதுபெரும் தலைவர், ஆட்சியில் இல்லாத பொழுதும் ‘இந்தியனா’க நடந்து…
காய்கதிர்க் கண்ணகி – – திருக்குறட் பாவலன் தமிழ்மகிழ்நன்
காய்கதிர்க் கண்ணகி (அறமே வென்றது) அறிவின் தாயே! அற்புதத் தாயே! எரிதழல் நெஞ்சம் இடும்பை தாங்க மூதின் மகளாய் மொய்ம்பின் உருவாய் ஏதிலி யாயுழல் இற்றைநாள் தமிழரின் அரசியல் உழவில் அன்புநீர் பாய்ச்சி முரசினை அறைந்து முனைமுகம் நின்று உரமுடன் நாளும் ஊக்கம் காட்டி இருபத் துமூன் றாண்டுகள் முயன்று கருவிற் சுமந்த காளையை மறுமுறை ஈன்ற குயிலே! ஈகியின் தாயே! தளரா உழைப்பால் தமிழ்நிலம் சுற்றி களத்தினை வென்ற காய்கதிர்க் கண்ணகி! உந்தன் அழுகையே உரிமை மீட்டது! இந்தியச் சிறையை இடித்தெ…
தூக்குத் தண்டனை நீக்கம்; உலகெங்கும் நீதியின் ஒளி: வைகோ
இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிமான்கள் சதாசிவம், இரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்தி(சிங்) ஆகிய மூவர் அமர்வு, 15 பேர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை நீக்கி, வாணாள் தண்டனையாக அறிவித்து இருக்கின்ற தீர்ப்பு, இந்திய நீதிமன்ற வரலாற்றில் பொன்னேடு ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோருக்கு, 2004 இல், உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. குடியரசுத் தலைவருக்கு…
மக்கள் குரல்கொடுத்தால்தான் பேரறிவாளன் விடுதலை ஆவான்! – தாயார் அற்புதம்
பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மையார் தூத்துக்குடியில் 07.01.14 திங்கள்கிழமை அன்று வந்திருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “இராசீவு கொலை வழக்கில் என் மகன் பேரறிவாளனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வழக்கின் உசாவல் அலுவலர் அதிகாரி தியாகராசன் தற்போது உண்மையை வெளியிட்டுள்ளார். அதன்மூலம், நாங்கள் இத்தனைக் காலம் கூறி வந்தது உண்மைதான் என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.” “சிறையில் இருந்து என் மகன் மிக விரைவில் விடுதலையாகி வெளியே வருவான். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன். வழக்கு அதிகாரி உண்மையை வெளியிட்ட உடனே என் மகன் விடுதலை…