இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வைகாசி 23, 2045 / 6.6.2014 அன்று பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புக்களில் படிக்கும் 130 மாணவர்களுக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தப்பெற்றது. தன்னார்வப் பணியில் பெரிதும்ஆர்வம் மிக்க வினைதீர்த்தான் இப்பயிலரங்கத்தை நிகழ்த்தினார். மாணாக்கர்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்னார்வமும் ஏற்படுத்துவதில் பேரார்வம் மிக்க, தலைமை ஆசிரியை திருமதி சந்தானம்   பயிலரங்கத்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியின் முதுநிலை ஆங்கில ஆசிரியர் திரு சரவணன் ஒருங்கிணைத்தார். உயர்நிலைப் பள்ளி 1928ல் தொடங்கப்பட்ட சிறப்புடையது. இங்குள்ள காந்தியடிகள் சிலையின் பீடத்தில் இந்தியாவில் முதன்முதலாக…