பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன – கல்வியமைச்சர் வேலுசாமி

பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக 100 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன  மாகாணக்கல்வியமைச்சர் வேலுசாமி  இலங்கையில் எதிர்காலத்தில்  ஆதாய நோக்கத்துடன்  தொடங்கப்படும் வணிக நிலையங்களைப்போலப் பன்னாட்டுப் பாடசாலைகளைத் தொடங்க முடியாது. பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக கல்வி அமைச்சுப் புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு எற்பாடுகளை மேற்கொண்டுள்ளது  பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாகத் தனக்கு 100 மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என  மாகாணக்கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தெரிவித்துள்ளார். பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும்  சிறப்புக் கூட்டம்  ஆக.11.2016   மாணாகக்கல்வி  அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் தலைமையில் மாணாகக்கல்வி…

அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த் திருவிழா

முத்தேர்த் திருவிழா   நுவரெலியா ஆவேலியா  அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின்  ஆண்டு சித்திரை முழுநிலவு முத்தேர்த்திருவிழா  சித்திரை 07, 2016 / 21.04.2016 காலை 10.30  மணியளவில் தொடங்கிச்சிறப்பாக நடைபெற்றது.   ஊர்வலத்தில் கலை  பண்பாடடு நிகழ்வுகளுடன் முத்தேர் பவனி நகர்வலம் வருவதையும் ஆலயத்தின்  செயற்குழுத் தலைவரும் கல்வி இணையமைச்சருமான வேலுசாமி இராதாகிருட்டிணன், ஆலய ஆயுட் காப்பாளரும் முன்னால்   சார்பு அமைச்சருமான முத்து சிவலிங்கம்,  ஆலயச் செயற்குழு உறுப்பினர்களையும் படங்களில் காணலாம். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

திருக்குறளின் பொதுமையுணர்வு – இராதாகிருட்டிணன்

திருக்குறளின் பொதுமையுணர்வு தமிழ்ச் செவ்வியல் நூலான திருக்குறள் வேறுபட்ட சமயத்தவராலும் பிரிவினராலும் உரிமை கொண்டாடப்படும் உண்மையே இதன் பொதுமையுணர்வைப் புலப்படுத்துகின்றது…… திருக்குறள் புத்தசமயத்தவர், சமணத்தவர், சைவர்கள், வைணவர் எனப் பலராலும் பயன்படுத்தப்படுகின்றது. இது “பொதுமறை” என அழைக்கப்படுகிறது.   ஒழுக்கக் கேடரான ஆரிய இனத்தவர் எப்பொழுதும் குடிப்பதும் சூதாடுவதுமாக இருந்துள்ளனர். இவ்விரண்டிற்கும் இரிக்கு வேதத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன. – மேதகு இராதாகிருட்டிணன்: சமயமும் பண்பாடும் (Religion and Culture)

ஏர்வாடியாரின் நூல்கள் – பன்னிருவர் ஆய்வு

  தை 24, 2046 / பிப்.7, 2015 எல்லோருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தை 24, 2046 – 7-2-2015 அன்று சனிக்கிழமை வாணி மகாலில் ஒரு முழு நாள் நிகழ்ச்சியில் 12 அறிஞர்பெருமக்கள் என்னுடைய படைப்புகளை ஆய்வு செய்து கட்டுரை வழங்குகிறார்கள். பேராசிரியர் இரா மோகன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நண்பர்கள் அவரையோ  என்னையோ தொடர்பு கொண்டு வருகையை உறுதிசெய்து கொள்ளலாம். அந்த ஒரு நாளை எங்களோடு இனிமையாகச் செலவழியுங்கள். உங்கள் வருகையை அன்புடன் வேண்டுகிறோம். அழைப்பிதழும்…