தமிழை உயர்தனிச் செம்மொழி என்று பறைசாற்றிய கால்டுவெல் – எழில்.இளங்கோவன்
இராபர்ட்டு கால்டுவெல் முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் (Robert Caldwell) அவர்களின் தாயகம், காட்டுலாந்து(Scotland). ஜரோப்பாவின் மிகப்பெருந் தீவான அயர்லாந்தில் அவர் பிறந்தார். அந்நாட்டின் கிளாடி(Clady) ஆற்றங்கரையில் அமைந்த பெல்பாட்டு என்ற சிற்றூர் அவரின் சொந்த ஊர். சித்திரை 26, 1845 / 1814 ஆம் ஆண்டு மேத் திங்கள் 7 ஆம் நாள் அவர் பிறந்தார். தொடக்கக் கல்வியை அயர்லாந்தில் பயின்ற அவர் தன் பத்தாம் அகவையில் பெற்றோருடன் காட்டுலாந்துக்குப் போய்விட்டார். பதினோறாம் அகவையில் ஆங்கில இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுறப் பயின்ற கால்டுவெல், தன்…
தன்னேரிலாத தமிழ் – க.தில்லைக்குமரன்
தன்னேரிலாத தமிழ் “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்” – தண்டியலங்காரவுரை மேற்கோள் 4000 ஆண்டுகளுக்கு முன் நாவலந் தேயமாகிய ஆதி இந்தியாவின் (பாக்கிசுதானும் சேர்த்து) பெரும்பாலானப் பகுதிகளில் தொல்தமிழ்க் குடும்பமொழி பேசப்பட்டு வந்ததற்குச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. பலுசிசுத்தான் பகுதியில் பிராகூயி என்கிற தமிழ்க்குடும்பமொழி பேசப்பட்டு வருவது இதற்குச் சான்று. கி.மு 1900-க்குப் பின்பு ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து (கசாக்சுதான்) சிறிது சிறிதாக அரப்பாவில் (http://en.wikipedia.org/wiki/Harappa) குடியேறத்…