இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18 தொடர்ச்சி) 19 தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறிய மருத்துவர்க்கு அமைய வேண்டிய குணங்கள் (இலக்கணங்கள்) பலவும் வாய்க்கப் பெற்றவர் மருந்துவ அறிஞர் இராமச்சந்திரன். ‘ நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ 39 ‘ உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் சொல்’ 40 ‘ உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று அப்பாலநாற் கூற்றே மருந்து’ 41 மருத்துவ முறைகளைக் கற்ற மருத்துவன், நோயாளியின்…
திருவாட்டி இராமச்சந்திரன் படத்திறப்பு விழா
பகுத்தறிவு அரிமா சிவகங்கை இராமச்சந்திரனாரின் மருமகளும், பொறியாளர் இராமச்சந்திரனாரின் மனைவியுமான திருவாட்டி புட்பராசாமணி அம்மையாரின் படத்திறப்பு இன்று (15.12.13)காலை, சென்னை திருவாவடுதுறை இராசரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. இருப்பூர்திக்காவல் கண்காணிப்பாளர் கயல்விழி இ.கா.ப. அவர்கள் அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்தார்கள். திருவாளர்கள் கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(நி), மரு.கருணாகரன், கொடைக்கானல் காந்தி, இலக்குவனார் திருவள்ளுவன், தி.க.சட்டத்துறைச்செயலர் இன்பலாதன், அரப்பா, அ.செல்வக்குமார், கலைச்செல்வன், முனைவர் ஐயாதுரை, சுந்தரராசன்,சங்காமிருதம் குருசாமி, மரு.இராமகிருட்டிணன் முதலானோர் நினைவுரை ஆற்றினர். திருவாட்டி மலர் வரவேற்புரையும் திருவாட்டி எழிலரசி நன்றியுரையும் ஆற்றினர். வழக்குரைஞர் இரா.நீதிச்செல்வன்,…
எது சொந்தம்?
– இனஎழுச்சிக் கவிஞர் நெல்லை. இராமச்சந்திரன் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 13 அறிக்கைவிட்டு அறிக்கைவிட்டே நமை ஏமாற்றி ஆண்டுவந்தார் இந்தியாவை! தில்லி ஆட்சி விரித்தவலை வீழ்ந்திருக்கும் இறக்கும் புறாக்களாகி விசையற்றுப் பதவிசுகம் தமிழர் கண்டார்! அவித்தமுட்டை போலாகிக் கருவும் செத்து அருந்தமிழன் தில்லிக்குத் தீனி ஆனான்! புவியாண்ட தமிழினத்தான் புள்கூட் டம்போல் பூமியெலாம் பறந்தோடி அகதி ஆனான் 14 ஊரிழந்தான் உணர்வழிந்தான் தேடித் தேடி ஒவ்வொன்றாய்த் தமிழுயிரை அவன்அ ழித்தான் தேரழித்தான் தெய்வீகப் பண்ப ழித்தான்…