சிறையில் தாக்குதலும் உயிர்போக்குதலும் – இலக்குவனார் திருவள்ளுவன்
சிறையில் தாக்குதலும் உயிர்போக்குதலும் ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை(திருவள்ளுவர், திருக்குறள் 541). மணிமேகலை வகுத்தாற்போல் சிறைக்கோட்டங்களை அறக்கோட்டமாக ஆக்குவதைத் தமிழ்நாட்டு அரசாள்வோர் நெறியாகக் கொண்டனர் அன்று. சிறைக்கூடங்கைளக் கொலைக்கூடங்களாக மாற்றுகின்றனர் இன்று. சிறையில் தாக்குதல் அல்லது கலவரம் என்பது எல்லா நாட்டுச் சிறைச்சாலைகளிலும் அரங்கேறும் அவலம்தான். ஆனால், இவை பொதுவாக இரு குழுக்களிடையே அல்லது வெளியே உள்ள குழு ஒன்றின் தூண்டுதலால் நடைபெறுவதாகத்தான் இருக்கும். அல்லது சிறைச்சாலை அடக்கு முறைக்கு எதிராகச் சிறைவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பர். ஆனால், …
காவேரியா…? அது பழைய நடிகையாச்சே! – த.இரெ.தமிழ் மணி
காவேரியா…? அது பழைய நடிகையாச்சே! இந்தி அரசே! கன்னட வெறியாட்டம் மறைக்க வேண்டுமா? பேரறிவாளனைத் தாக்கு! விக்னேசு எழுச்சி மறக்க வேண்டுமா? இராம்குமாரை முடி! வாக்காளர்களே! என விளி! புலால் உணவுப் பொட்டலத்தையும் சாராயத்தையும் கண்ணில்காட்டு! பிறகு சொல்லுவான்- “காவேரியா…? அது பழைய நடிகையாச்சே?” த.இரெ.தமிழ் மணி
கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியும் சாதிக்கண்ணாடியரும் – இலக்குவனார் திருவள்ளுவன்
கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியும் சாதிக்கண்ணாடியரும் கடந்த ஆனி 10, 2047 / சூன் 24,2016 அன்று சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் தொடரிநிலையத்தில் பொறியாளர் ச.சுவாதி கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் கொலைசெய்தவரை விரைவில் கைதுசெய்துள்ள காவல்துறைக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பொறி.சுவாதியுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவரே வாயில் / தாடையில் / கழுத்தில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னாலிருந்து அரிவாளால் வெட்ட முற்படும்பொழுது கழுத்தில்படாமல் வாயில் அறுத்திருக்கலாம் என முதலில் பலரும் கருதினர். ஆனால் கொலைக்குற்றவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள இராம்குமார்,…