புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 123 ஆவது பிறந்தநாள் விழா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 124 ஆவது பிறந்தநாள் விழா, உழைப்பாளர் நாள் விழா ஆகிய முப்பெரு விழா தந்தை பெரியார் திராவிடர் கழகத்தால், இராயப்பேட்டை, ஔவை சண்முகம்சாலை பெரியார் சிலை அருகில்   வைகாசி 31, 2045 / 14.06.2014 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. த.பெ.தி.க. சட்டத்துறைச் செயலர் திரு வை. இளங்கோவன், தலைமை தாங்கினார். காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட வீரக்கலை நிகழ்சிகளுடன் விழா தொடங்கியது….