அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமைகோரித் திராவிடர் கழகம் மறியல் போராட்டம்
அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமைகோரித் திராவிடர் கழகம் மறியல் போராட்டம் சென்னையில் சித்திரை 05, 2047 / ஏப்பிரல் 18.4.2016 காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அலுவலகம் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமை கோரி நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இரா.அதியமான், கவிஞர் வா.மு.சேதுராமன் முதலான பலர் கைதாயினர்.