பாரதிதாசன் 125 ஆம் ஆண்டுவிழாக் கருத்தரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம்
மாசி 27, 2047 / மார்ச்சு 10, 2016 காலை முதல் மாலை வரை
உலகத்தமிழ்க்கழகம் சார்பில் இளவரசு நினைவேந்தல்
தமிழியக்கத் தலைவர் பேராசிரியர் இரா.இளவரசு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் தி.பி.2016 கும்பம் 15 வெள்ளிkகிழமை (27-01-2015) மாலை 6.15 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. உலகத்தமிழ்க் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் ந.அரணமுறுவல் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். சென்னை யாழ் நூலகம் வைகறைவாணன் வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ நெடுமாறன் மறைந்த இளவரசின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். இக்காலம், தமிழகத்தில் நிலவும் தமிழ் மொழி, தமிழின அவல நிலைகளை…
பேராசிரியர் இரா.இளவரசு நினைவேந்தல்
பேராசிரியர் இரா.இளவரசு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி தென்மொழி இயக்கம் சார்பில் சென்னை மேடவாக்கம் பாவலரேறு தமிழ்க் களத்தில் தி.பி.2046 கும்பம் 10 ஞாயிறு (22-02-2015)அன்று மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது. முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையில் பேராசிரியர் பொற்கோ மறைந்த இளவரசு அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். பேராசிரியர் அரசேந்திரன், முனைவர் இரா .கு.ஆல்துரை, முனைவர் அரணமுறுவல், திருவினர் கி. குணத்தொகையன், அன்புவாணன் வெற்றிச்செல்வி, வைகறைவாணன், இரா.செம்மல், வழக்கறிஞர் பாவேந்தன், தமிழ் மண் பதிப்பகம் கோ.இளவழகன் ஆகியோரும் திருவாட்டியர் இறை.பொற்கொடி, தழல் தேன்மொழி, மரு. அன்பு (பேரா.இளவரசு…