நெடுவாசல் உண்மைகள்! #கள ஆய்வுக் கட்டுரை – இரா.கலைச்செல்வன்
ஒரு மாதம் தொடர்ந்து எரிந்த எண்ணெய்-இயற்கை எரிவளிக் கூட்டுக் குழுமக் (ONGC) குழாய்! நெடுவாசல் உண்மைகள்! #கள ஆய்வுக் கட்டுரை மாலை நேரம். நெடுவாசல் சிற்றூரை நெருங்கிக் கொண்டிருந்தேன். வடக்காடு சிற்றூரில் தன் வயலில் குடும்பத்தோடு கடலை பறித்துக் கொண்டிருந்தார் விசயா அக்கா. “இங்கே என்ன சிக்கல் எனச் சரியாகவே விளங்கவில்லை தம்பி! இந்தப் பக்கத்தில் ஏற்கெனவே எரிநெய்(பெட்ரோல்) எடுப்பதாகச் சொல்லிப் பல ஆண்டுகளுக்கு முன்பே குழாயெல்லாம் அமைத்தார்கள். இப்பொழுது திடீரென ஏதோ புதிதாக நீர்மக் கரிமத் திட்டம் (Hydro Carbon project)…