கலைகள்
கலைமரபில் ‘ஆயகலைகள் அறுபத்து நான்கு’ என்னும் மரபு தோற்றம் பெற்றுள்ளது. காதர்பரி, பாகவத புராணம், விட்ணு புராணம், அரிவம்சம், இலலித விசுதாரம், காமசூத்திரம் முதலான நூல்கள் 64 கலைகளைப் பற்றிக் குறிக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றிற்கும் சிற்சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில நூல்கள் சிலவற்றைக் கூட்டியும் சிலவற்றை நீக்கியும் கொடுத்¬துள்ளன. ஆனால், 64 என்கின்ற எண்ணிக்கையை எல்லா நூல்களும் ஒரே நிலையாகப் பின்பற்றியுள்ளன. (கு.வெ.பாலசுப்பிரமணியன்: சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும்: பக்கம்.13) சிலம்பில் 64 என்கின்ற எண்ணிக்கை குறிப்பிட்டப்பட்டுள்ளது. (சிலப்பதிகாரம்: ஊர்சூழ்வரி: அடி. 116)…