கி.மு நான்காம் நூற்றாண்டுச் சங்கக் கால நாணயத்தில் அரிய தகவல்கள்! – இரா.கிருட்டிணமூர்த்தி
கி.மு நான்காம் நூற்றாண்டுச் சங்கக் கால நாணயத்தில் அரிய தகவல்கள்! – நாணயவியல் ஆய்வாளர் இரா.கிருட்டிணமூர்த்தி “கி.மு நான்காம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சங்கக் காலப் பாண்டியரின் நாணயத்தில் அரிய தகவல்கள் கிடைத்துள்ளன” எனத் தென்னிந்திய நாணயவியல் ஆய்வு அமைப்பின் தலைவரான தினமலர் ஆசிரியர் இரா.கிருட்டிணமூர்த்தி கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சங்கக் காலப் பாண்டியர் நாணயங்களை அண்மையில் ஆய்வு செய்தபொழுது பல அரிய தகவல்கள் கிடைத்தன. நாணயத்தின் முன்புறப் பகுதியின் கீழ்ப் பகுதியில் யானை ஒன்று வலப் பக்கம் நோக்கி…