வடக்கு-கிழக்கில் வாழும் தமிழனின் திறந்த மடல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தெரிவித்துள்ள கருத்து விவாதத்திற்கு உரியதாகியிருக்கின்றது. அது மட்டுமல்லாமல், தமிரசுக் கட்சி தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தொடர்பிலும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பச் செய்திருக்கின்றது. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தால் மட்டுமே பதிவு சாத்தியம் என்றும், தான் ஒருபோதும் பதிவு செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். இதனை அவர் தனது அரசியல்தந்திரமாக நினைத்திருக்கலாம். ஆனால் அவரது இக்கருத்தை மக்கள் எந்தளவிற்கு ஏற்பார்கள் என்பதும்…
போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!
போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! ஐ.நா சிறப்புத் தூதுவரிடம் வலியுறுத்தியது த.தே.கூ “இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்- மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா. விசாரணை அறிக்கையையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். ஐ.நா. விசாரணை அறிக்கைக்கிணங்கப் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.”என்று, ஐ.நாவின் சிறப்பு வல்லுநர் பப்லோ டி கிரெய்ப்பிடம் நேரில் வலியுறுத்தினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள். நேற்று கொழும்பு தாசு சமுத்திரா உறைவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐ.நா. சிறப்பு…
மோடி சொல்லிவிட்டார் – கட்டியிருக்கும் கோவணத்தையும் உருவிப்போட்டுஇருங்கள்!
“ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ள நிலையில், நாட்டைப் பிரித்துத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோர முடியாது.” இது எப்படி இருக்கிறது? சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் சம்பந்தன் தெரிவித்த கருத்து இது உங்கள் எல்லோருக்கும் இதில் உடன்பாடு தானா? இப்போது விளங்குகிறதா ஏன் ஈழத்தின் உணர்ச்சிக் கவிஞர் அண்ணன் காசி ஆனந்தன் அவர்கள் ”சுத்த வீணான மனுசர் சம்பந்தன்” என்று ஒருமுறை வெளிப்படையாக மதிப்பிட்டார் என்று? இந்தியா சொல்லும்,” கட்டியிருக்கிற கோவணத்தையும் உருவிப்…