ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய உதவுங்கள்!   உலகின் மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது.   ஆறு பேராயிரம்(மில்லியன்) அமெரிக்க தாலர்கள் முதலீட்டில் இந்தத் துறை அங்கே தொடங்கப்படவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான   மருத்துவர் விசயராகவன் சானகிராமன் பி.ஒ.நி. / பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.   அவரும் அவரது நண்பரும் மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை நூறாயிரம் தாலர்களை இதற்காக அளித்துள்ளதாகவும், எஞ்சிய ஐந்து பேராயிரம்(மில்லியன்) தாலர்களை வட அமெரிக்காவில் வாழும்…