செய்திகளில் மலேசியா இணையத் தமிழ் மாநாடு
செய்திகளில் மலேசியா இணையத் தமிழ் மாநாடு மாலைமுரசு விகடன் மலேசியாவில் தமிழ் இணைய மாநாடு! இரா.தமிழ்க்கனல் மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், வரும் ஆகத்து 26 முதல் 28-ஆம் நாள் வரை, ’உலகத் தமிழ் இணைய மாநாடு 2017’ நடத்தப்படுகிறது. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, மாநாட்டின் இணைத்தலைவர் முனைவர் இலட்சுமி கார்மேகம், நெறியாளர் திருவள்ளுவன் இலக்குவனார் ஆகியோர் இதைத் தெரிவித்தனர். மலேசியாவில், பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியல்…
மலேசிய முத்து நெடுமாறனுடன் செவ்வி – இரா.தமிழ்க்கனல்
மலைக்கவைக்கும் செல்லினம் செயலி! ’செல்பேசி இல்லாதவர்கள், செல்லாதவர்கள்’ என்று ஆகிவிடும் போல உலகம் முழுவதும் நிலைமை மாறிவருகிறது. அலைபேசியின் பயன்பாட்டைப் பெருக்குவதற்காகத் தொலைத்தொடர்பு வல்லுநர்கள் இடைவிடாது ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழர்களும் இதற்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை மெய்ப்பித்து வருகிறார், மலேசியாவைச் சேர்ந்த கணினிக் கணிய(மென்பொருள்) வல்லுநர், முத்து நெடுமாறன். தமிழில் இணையம் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, கணினித் தமிழ்த் துறையில் களம் இறங்கி, இன்று உலக அளவில் முன்னணி எழுத்துரு வல்லுநர்களில் ஒருவராகப் பாராட்டப்படுகிறார். அலைபேசிகளில் தமிழைப் பயன்படுத்துவதற்கான…