இசைத்துறைக் கலைச்சொற்கள் – இரா.திருமுருகன்

இசைத்துறைக் கலைச்சொற்கள் மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை முதலிய பழந்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் மருதம், குறிஞ்சி, நைவளம், காமரம், மருவின்பாலை முதலிய பண்களின் பெயர்கள் காணப்படுகின்றன. திருப்புகழில் அருணகிரிநாதர் இந்தளம், சாதாரி, தேசி, குறிஞ்சி, நாதநாமக்கிரியா, கௌள, சீராகம் முதலிய பெயர்களைக் குறிப்பிடுகிறார். இவற்றில் பழைய பண்களின் பெயர்களும் இக்காலத்து இராகங்களின் பெயர்களும் கலந்து காணப்படுகின்றன. தோடி, முரளி, வராளி, பைரவி முதலிய இராகத்தின் பெயர்களைத் திருக்குற்றாலக் குறவஞ்சி குறிப்பிடுகிறது. மோகனம், முகாரி இராகங்களை அண்ணாமலையாரின் காவடிச் சிந்து குறிப்பிடுகிறது. முனைவர் இரா.திருமுருகன்: ஏழிசை எண்ணங்கள்:…

இசைச்சொற்கள் அன்றும் இன்றும்

   இன்று ‘உச்சஃச்தாயி’, ‘மந்திரஃச்தாயி’, மத்திமஃச்தாயி’ எனப்படுவன அன்று வலிவு மண்டிலம், மெலிவு மண்டிலம், சம மண்டிலம் என்ற பெயரில் இருந்தன என்றும், இன்று, ‘கோமள தீவிர சுரங்கள்’ எனப்படுவன அன்று குறை நரம்பு, நிறை நரம்புகளாகப் பெயர் பெற்றிருந்தன என்றும், இன்று சம்பூர்ணம், சாடவம், ஓளடவம், சதுர்த்தம் என்று சொல்லப்படும் இராக வகைகள் அன்று முறையே பண், பண்ணியல், திறம், திறத்திறம் என்ற பெயர் பெற்றிருந்தன என்றும், கிரக பேதம் என்று இன்று சொல்லப்படுவது அன்று பண்ணுப் பெயர்த்தல் என்றும், பாலைத் திரிபு…

12,000 பண்களுக்கு உரிமையான தமிழிசைச் செல்வம்

    ஆடல் பாடல் இசையே தமிழ் (3,45) என்ற அடியில் வரும் இசை என்பதை விளக்கும் அரும்பதவுரையாசிரியர் “இசையாவது நரப்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகளும்’ என்று கூறுகிறார்.   இன்றைய கருநாடக இசையுலகில் கூறப்படும் இராகங்களின் எண்ணிக்கை 1230க்கு மேல் இல்லை. அன்ற இருந்தனவாக அரும்பதவுரைகாரர் கூறும் 11991 என்ற பண்களின் எண்ணிக்கை நம்மை மலைக்க வைக்கிறது. இந்த எண்ணிக்கை ஏதோ குத்துமதிப்பாகச் சொன்னதாக இருக்காது என்பது உறுதி. அப்படிச் சொல்லியிருந்தால் ‘பன்னீராயிரம் ஆதியிசைகள்’ என்று சொல்லியிருக்கலாம். ஏதோ…

பண்ணும் பரதமும் வடக்கே தோன்றியது என்றால் அங்கே ஏன் இல்லை?

    சாரங்கத்தேவர்தான் கருநாடக இசையை உண்டாக்கியவர் என்றும், பரத முனிவர்தான் பரத நாட்டியத்தைக் கண்டு பிடித்தவர் என்றும் ஒரு கூட்டத்தார் கூறி வருகின்றனர்.   காசுமீரத்துச் சாரங்கதேவர்தான் கருநாடக இசையைப் படைத்தவர் என்பது உண்மையானால் காசுமீரத்திலும், மத்தியப்பிரதேசத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் இன்றுள்ள இசைவாணர்கள் மோகனத்தையும் (முல்லைப்பண்), யதுகுல காம்போதியையும் (செவ்வழி), மத்தியமாவதியையும் (செந்துருத்தி) பாடிக் கொண்டிருக்க வேண்டும். வடபுலத்துப் பரத முனிவர்தாம் பரத நாட்டியத்தைக் கண்டுபிடித்தவர் என்பது உண்மையானால், இன்று பஞ்சாபிலும், பீகாரிலும், வங்காளத்திலும் நாட்டியக் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருக்க வேண்டும். கருநாடக இசையும்…

தமிழ்ப்பாடல்களில் அயல்மொழி ஒலிகள் வரக்கூடா!

 ‘தமிழே’ என்பதை, “தமிழாவது வடவெழுத்தொரீஇ வந்த எழுத்தானே கட்டப்பட்ட வாக்கியக்கூறுகளும், இயலிசை நாடகங்களும் என்று சொல்லப்படா நின்ற மூன்று தமிழர்களும்’ என்று விளக்குகிறார். அரும்பதவுரைகாரர். தமிழ்பாடல்களில் ஜ, ஸ, ஹ, ஷ, க்ஷ என்ற வடமொழி ஒலிகள் வரலாகாது என்ற நெறி இசையுலகிலும் அன்று கடைப்பிடிக்கப்பட்டது என்பது இதிலிருந்து தெரிகிறது. எனவே ‘ஸம்போ மஹாதேவா’, ‘நாயகர் பக்ஷமடி’, ‘ஜங்கார ஸ்ருதி செய்குவாய்’ என்றெல்லாம் இன்று பாடுவது தமிழிசையிலக்கணத்துக்கு மாறானது என்பது புலனாகிறது. – முனைவர் இரா.திருமுருகன்: சிலப்பதிகாரம்: தமிழன் படைத்த கலைக்கருவூலம்: பக்கம். 23

தமிழ்ப் பெயர் தொலைத்த தமிழர்கள்

  இசைநாடகத் துறைக் கலைச்சொற்கள் அனைத்தும் இன்று வடமொழியாக்கப்பட்டு வழங்குகின்றன. உலகிலேயே முதலில் தோன்றிய மூத்த இசை என்று போற்றப்படும் இசை, தமிழன் கண்ட தமிழிசை, இன்று ‘கருநாடக சங்கீதம்’ என்று பெயர் மாறியுள்ளது. மதிவாணனார் செய்த ‘நாடகத்தமிழ்’ போன்ற நூல்களிற் கூறப்பட்ட தமிழன் கண்ட கூத்து முறை இன்று ‘பரதநாட்டியம்’ என்று பெயர் மாறியுள்ளது. பெயர் மாறிப்போன தன் பிள்ளைகளையே இன்றைய தமிழன், “யாரோ? இவர் யாரோ? என்ன பேரோ?” என்று மயங்கிப் பாராமுகமாய் இருந்து வருகிறான். – முனைவர் இரா.திருமுருகன்: சிலப்பதிகாரம்…