தோழர் தியாகு எழுதுகிறார் 215 : காலுடுவெல் கலைவண்ணம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 214 : வான்தொடு உயரங்கள் தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார்காலுடுவெல் கலைவண்ணம் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இராபருட்டு காலுடுவெல் முதலில் திருத்தொண்டராக 1838இல் சென்னைக்கு அனுப்பப்பட்டு, 1841இல் இடையன்குடி வருவதற்கு முன்பே அப்பகுதியில் கெரிக்கு, சத்தியநாதன் ஆகியவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். கிறித்துவத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு சிறு கூட்டமும் உருவாகியிருந்தது. இவர்கள் வழிபாடு செய்வதற்காக ஒரு சிறிய ஆலயமும் கட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கிறித்தவர்களை முறையாக வழிநடத்த முழுநேரத் திருத்தொண்டர்கள் இல்லை. எனவே அவர்கள் முழுமையாகக் கிறித்துவத்தில் ஊன்றி நிற்கவில்லை. காலுடுவெல்…
தோழர்தியாகு எழுதுகிறார் 209 : “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை”
(தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன் – தொடர்ச்சி) “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” இனிய அன்பர்களே! இரா.பி. சேதுப்பிள்ளை பற்றி முதலில் எப்போது படித்தேன்? அறிஞர் அண்ணாவின் சொல்வன்மைக்குச் சான்றாக ஒரு நிகழ்வைச் சொல்வதுண்டு: ஒரு முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொது மேடையில் இரா.பி. சேதுப்பிள்ளை அண்ணாவிடம், “எதிர்பாராமல் அளிக்கும் தலைப்பில் உடனே பேசுவீர்களா?” என்று கேட்டார்.. “பேசுவேன்” என்று அண்ணா கூறினார். உடனே சேதுப்பிள்ளை அதே மேடையில் “ஆற்றங்கரையினிலே” என்னும் ஒரு தலைப்பை வழங்கினார். ‘அண்ணா எப்படிப் பேசுவாரோ?’ என…
தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன்
(தோழர்தியாகு எழுதுகிறார் 207 : தமிழ்மணக்கும் காலுடுவெல் இல்லம் – தொடர்ச்சி) இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன் இராபருட்டு காலுடுவெல் குறித்தும் அவரது மொழியியல் ஆய்வு, அதன் முடிவுகள் குறித்தும் அண்மைக் காலத்தில்தான் நிறைய படித்தேன். அரசியல் வகுப்புக்காகப் படித்தமையால் சற்று ஆழ்ந்தே படித்தேன் எனலாம். மொழிநூல் அறிஞர் காலுடுவெல் ‘திராவிடம்’ என்ற சொல்லை ஆண்டார் என்ற ஒரே காரணத்துக்காக உடனடி அரசியல் தேவைகளுக்காக அவரைக் கொச்சைப்படுத்தும் போக்குகள் தலைதூக்கியிருக்கும் இத்தருணத்தில் காலுடுவெல்லை முறையாக அறிந்து கொள்வதும் அறியச் செய்வதும் தேவை எனக் கருதுகிறேன்….