இன்றைய இளைஞர்களிடம் இலக்கிய நூல்களைப்          படிக்கிற ஆர்வம் குறைந்திருக்கிறது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு   அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு   ஊரில்  இத்திங்கள்  (மாசி/மார்ச்சு) தொடக்கத்தில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில், அறிவியல்  தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் அதிகமாய் அக்கறை செலுத்திவரும் இன்றைய இளைஞர்களிடம் தமிழ் இலக்கியம் சார்ந்த நூல்களைப் படிக்கிற ஆர்வம் வெகுவாய் குறைந்தே காணப்படுகிறது என்று கவிஞர் மு.முருகேசு பேசினார். வேலூர் கவிஞர் பிரதீப்இரவி எழுதிய ‘வீடு திரும்பும் வேளையில்.. ‘ கவிதை நூலை…