இருமை வகைத்தே இயற்கை நெறியே! அல்லது வெளிக்குமால் இல்லது கருக்குமால் வல்லது மெலிக்குமால் மெல்லது வலிக்குமால் புறத்தது அகக்குமால் அகத்தது புறக்குமால் நிறுத்த வியல்நிலை திரீஇ தோன்றலும் இருத்தலும் ஒடுங்கலும் வினையல் மும்மை இருமை வகைத்தே இயற்கை நெறியே! தொல்லூர் கிழான். சொற்பொருள் : அல்லது > அல் அது = இருள் நிலை என்பது வெளிக்குமால் = தன்னிலை மாறி வெளிறி வெளிச்சமாகுமாதலால் இல்லது > இல் அது  = இல் எனும் ஒளிமையாகிய வெளிச்சம் மாறி இருண்டு கருக்குமாதலால் வல்லது >…