கனிவில்லாத இந்திய அரசும் துணிவில்லாத தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்
கனிவில்லாத இந்திய அரசும் துணிவில்லாத தமிழக அரசும் மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருப்பது இயற்கைதான். ஆனால், தமிழக அரசினருக்கு இந்த அளவு பயம் இருப்பது நாட்டு மக்களுக்கு அல்லவா தீமையாய் முடிகிறது? தீமையின் உச்சக்கட்டம்தான் தேசியத்தகுதி நுழைவுத் தேர்வு -NEET – மூலம் மாணவர் சேர்க்க நடை பெற இசைந்தது. கல்வித்துறை என்பது மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பொழுதே தீமைகள் உலா வரத் தொடங்கின. இப்பொழுது கல்வித்துறை முழுமையும் மத்தியப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனிமேல்…
தமிழர் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை, இசை, இசையே!
தமிழர் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை, இசை, இசையே தமிழகத்தில் ஒரு குழந்தை பிறந்த நாள் தொட்டு அதாவது அது தன் முதலாவது உயிர்க்காற்றை இழுக்க ஆரம்பித்தது முதல் தொட்டு, இறுதி மூச்சு வரை தமிழ் இசை அதன் வாழ்க்கையோடு ஒன்றித்து நிற்கிறது. ஏன்? அது உயிர்நீத்த பின்னர்கூட அதன் தாயும் உறவினரும் இசைக்கும் ஒப்பாரிப் பாடல் அதன் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் எல்லாச் சடங்குளிலும் பிறப்புத்தொட்டு இறப்பு வரை வாழ்விலும் தாழ்விலும் இசையை இசைத்து…