இணைய மாநாடு :ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான கடைசி நாள் நீட்டிப்பு
ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான கடைசி நாள் நீட்டிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது மாநாட்டில் பங்கு பெறுவதற்கான சுருக்கக் கட்டுரையை அனுப்பும் நாள் தை 1, 2046 / 15.01.2015 என நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கட்டுரையாளர்கள் தத்தம் கட்டுரையை அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றனர்.