தேனிப்பகுதியில் நாட்டுக்கோழி விலை உயர்வு
தேனிப்பகுதியில் நாட்டுக்கோழி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, மேல்மங்கலம், செயமங்கலம், குள்ளப்புரம் பகுதிகளில் இப்பொழுது கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால் புதுமணத்தம்பதிகள் தலைதீபாவளிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். தலை தீபாவளி, திருவிழாக்கள் இணைந்து வருவதால் நாட்டுக்கோழி விற்பனை சூடுபிடித்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வீட்டிலும் நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தனர். அதன் பின்னர் இறைச்சிக் கோழி வருகையால் நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவந்தது. இந்நிலையில் தற்பொழுது தென்னந்தோப்புகளிலும், பண்ணை வயல்களிலும் நாட்டுக்கோழிகளை வளர்த்து…